இன்று 26-09-26 காலை 10:00 முதல் 12:00 மணி வரை சங்கத்தில் மூன்றாவது பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்கால் , 46 வள்ளல் சீதக்காதி வீதி , ஒருங்கிணைப்பாளர் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தீர்மானம்-1. 2026 ஆம் ஆண்டு, சங்கம் சார்பாக ஆயுத பூஜை கொண்டாடுவது தொடர்பாக பேசப்பட்டு, சங்க பதிவு எண் கிடைத்த பிறகு, 2027 முதல் சங்கத்தின் சார்பாக ஆயுத பூஜை கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் – 2 காரைக்கால் வார சந்தை உட்பட சில இடங்களில் பேட்டரி ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக பேசப்பட்டு, அதற்கும் சங்க பதிவு எண் கிடைத்த பிறகு, காரைக்காலில் குறிப்பிட்ட இடங்களில் பேட்டரி ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க போர்ட் வைத்து “ஆட்டோ ஸ்டாண்ட்” அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் – 3 சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள், பேட்டரி ஆட்டோ வைத்திருந்து, தற்காலிகமாக அந்த பேட்டரி ஆட்டோவை ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டால், மீண்டும் பேட்டரி ஆட்டோ விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு எடுத்து ஓட்டத்தொடங்கும் வரை, அவரின் சங்க செயல்பாடுகள் (suspension) நிறுத்தி வைக்கப்படும் .
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, கையொப்பம் இட்ட நபர்கள் பின்வருமாறு:
- திரு ஹமீது. MMY
- திரு பாலு
- திரு சுல்தான்
- திரு ஷாஹுல் ஹமீது
- திரு சதாம்
- திருமதி ஜெயப்பிரதா
- திரு நடராஜன்
- திரு ஜெஹபர் சாதிக்
- திரு சசி குமார். G
- திரு செந்தில் குமார். J
- திரு செந்தில் குமார். R
- திரு விக்னேஷ்
- திரு மாலிக்
- திரு ஜார்ஜ். T

உங்களின் சேவைக்கும் உங்களது முயற்சிக்கும் மனமார்ந்த நன்றி